இவள் தான் முதல் எங்கள் குழந்தை.. சரிகமபவில் கண்ணீர் விட்டு பேசிய சைந்தவி- நடந்தது என்ன?
சரிகமப செட்டில், “இவள் தான் முதல் எங்கள் குழந்தை..” என சைந்தவி குடும்பத்தினர் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சரிகமப நிகழ்ச்சி
பிரபல தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிக்கு இணையாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சரிகமப.
இந்த நிகழ்ச்சி குழந்தைகளின் திறமைகள் மற்றும் அவரின் வாழ்க்கை முறை என்பவற்றை உலகிற்கு தெரியப்படுத்தி, அவர்களுக்கு தேவையான வசதிகளையும் நிகழ்ச்சி மூலம் செய்து கொடுத்து வருகிறது.
அத்துடன், வார வாரம் பாட வரும் குழந்தைகள் தங்களுக்குள் இருக்கும் திறமைகளை முடிந்தவரை வெளிகாட்டி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக மேடையில் தொகுப்பாளினிக்கு இணையாக சில குழந்தைகள் பேசும் பொழுது, அந்த விடயம் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறுவது வழக்கம்.
மேடையில் கண்ணீர் விட்ட சைந்தவி
இந்த நிலையில், மூன்று நடுவர்களில் பிரபலமாக இருப்பவர் தான் பாடகி சைந்தவி. இவர் நடிகரும், இசையமைப்பாளருமான ஜு.வி பிரகாஷின் முன்னாள் மனைவி ஆவார். இவர்களுக்கு அழகான மகள் ஒருவரும் இருக்கிறார்.
தற்போது கணவரை பிரிந்து அவருடைய குடும்பத்தினருடன் வாழ்ந்து வரும் சைந்தவி, சரிகமப செட்டில் குடும்பத்தினர் முன்னிலையில் கண்ணீர் விட்டப்படி ஒரு சில வார்த்தைகளை பகிர்ந்துள்ளார்.
அதாவது, “ நான் விழுந்தால் என்னை தூக்கி விட என்னுடைய குடும்பத்தினர் இருக்கிறார்கள். என்னுடைய சகோதரர் இப்படி பேசுவதற்கு என்னுடைய அண்ணியார் தான் காரணம்..” என அவரையும் மேடைக்கு அழைத்து தங்களின் உணர்வுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன், சைந்தவிக்கு ஆதரவான கருத்துக்களும் எழுந்து வருகின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |