ராதிகாவிடம் கொத்தாக மாட்டிய இனியா! மீண்டும் வெடிக்கும் சண்டைகள்
பாக்கியலட்சுமி சீரியலில் மீண்டும் ராதிகா மற்றும் இனியா இருவருக்கும் இடையில் சண்டைகள் ஆரம்பித்துள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிப்பரப்பாகும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஆரம்பத்தில் சுமாராக தான் ஓடிக் கொண்டிருந்தது. இதற்கு அடுத்தப்படியாக பாக்கியலட்சுமி சீரியலில் நாளுக்கு நாள் புதிய டுவிஸ்ட்களை வைத்து தொடரை விறுவிறுப்பாகி வருகிறார்.
முதலில் கோபி - பாக்கியா என நகர்ந்த சீரியல் காலப்போக்கில் கோபி -பாக்கியா - ராதிகா என மூன்று பேராக மாறி விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருந்தது.
இதனை தொடர்ந்து இவர்களின் சண்டைகள் போய் கொண்டு இருக்கும் போது எழில் - அமிர்தா என்ற பிரச்சினையை உருவாக்கி அதன்படி கதையை நகர்த்திச் சென்றார்.
இதன் போது எடுக்கப்பட்ட காட்சிகளை கூறுவதை விட எபிசோட் எபிசோட்டாக பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும். அந்தளவு விறுவிறுப்பான காட்சிகள் வைத்து அசத்தியிருப்பார் இயக்குநர்.
பாட்டி - அமிர்தா என இவர்களை அடிப்படையாக வைத்து வரும் எபிஷோட் நகர இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
ஒழுங்கா படி இனியா
இந்த நிலையில் தன்து அப்பாவுடன் இருக்கும் இனியா தற்போது பிளஸ் டூ பரீட்சைக்கு காத்திருக்கிறார். அப்போது படிப்பதாக கூறிவிட்டு கையில் மொபைல் போனை வைத்து தனது டியூசன் ஆண் நண்பரிடம் மெசேஜ் செய்து பேசி வருகின்றார்.
இதனை அவதானித்த ராதிகா, “நீ பண்ணுறது ஒன்றும் சரியில்லை. போனை வைத்து விட்டு ஒழுங்காக படி, அப்போது தான் நீ பிளஸ் டூ பரீட்சையில் நல்ல மதிப்பெண் பெறமுடியும்... ஆமா நீ யாருக்கு மெசேஜ் பண்ணிட்டு இருக்க? ” என அழுத்தமாக கேட்டுள்ளார்.
அப்போது இனியா, “ இதெல்லாம் கேட்க நீங்க யாரு” என கேட்டுள்ளார். அப்போது ராதிகாவிற்கு பக்கத்தில் கோபியும் இருக்கிறார்.
இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பாக்கியட்லசுமி சீரியல் ரசிகர்கள், “ராதிகா மீது என்ன தப்பு இருந்தாலும் அவர் கூறும் கருத்துக்கள் சரியானவை.” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.