பாக்கியாவிடமிருந்து இனியாவை பிரிக்கும் கோபியின் தந்திரம்! பரபரப்பான ப்ரொமோ காட்சி
பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவை பாக்கியாவிடமிருந்து பிரித்து தன்னுடன் அழைத்துச் செல்ல கோபி செயல்படும் காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் கணவர் தொடர்பு வைத்துள்ளதாக எடுக்கப்பட்டுள்ளது.
பாக்கியாவிற்கு கோபி செய்யும் துரோகத்தால் ரசிகர்கள் அவரைத் திட்டித் தீர்த்து வருகின்றனர். அதிலும் தற்போது ராதிகாவை திருமணம் செய்து கொண்டதை அவதானித்த ரசிகர்கள் மேலும் கடுப்பில் இருந்து வருகின்றனர்.
பாக்கியாவிடமிருந்து பிரியும் இனியா
இந்நிலையில் ராதிகாவை திருமணம் செய்து கொண்டு அவஸ்தையை அனுபவித்து வரும் கோபி தற்போது இனியாவை தன்னுடன் அழைத்துச் செல்வதற்கு முயற்சித்து வருகின்றார்.
இனியா பள்ளியில் மொபைல் போன் பயன்படுத்தியதை அவதானித்த ஆசிரியர், பெற்றோரை அழைத்து வர கோரியுள்ளார்.
மற்ற மாணவிகள் அழைத்து வந்த நிலையில் இனியா மட்டும் வீட்டில் கூறாமல் பள்ளிக்கு வந்துவிடவே, பெற்றோர் வரவில்லை என்றால் வகுப்பறைக்கு அனுமதிக்கமாட்டேன் என்று ஆசிரியர் கூறியுளளார்.
பின்பு தனது தந்தை கோபிக்கு போன் செய்து பள்ளிக்கு வரவழைத்துள்ளார். இதனால் வீட்டில் அனைவரும் இனியா மீது கோபம் கொள்வதால், கோபி தனக்கு சாதகமாக்கியுள்ளார்.