Baakiyalakshmi: முடிவுக்கு வருகிறதா பாக்கியலட்சுமி சீரியல்? சுசீத்ரா ஷெட்டியால் ஏற்பட்ட சந்தேகம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் 2020ம் ஆண்டு ஜுலை 27ம் தேதி முதல் தொடங்கியது.
இந்த சீரியலில் சுசீத்ரா ஷெட்டி பாக்கியலட்சுமியாகவும், சதீஷ் குமார் கோபிநாத்தாகவும், ரேஸ்மா பசுபுலேட்டி ராதிகாவாகவும், ராஜலட்சுமி ஈஸ்வரியாகவும், நவீன் பிரின்ஸ், அக்ஷிதா அசோக் என்று ஏரளமான பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
ஒரு குடும்ப தலைவியின் போராட்ட கதையாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் தற்போது ராதிகா நிரந்தரமாக கோபியை விட்டு பிரிந்துள்ளார்.
மகன்களும் நல்லபடியாக வாழ்ந்து வரும் நிலையில், இனியாவும் செல்வியின் மகனை காதலித்து வருகின்றார். இதனால் கதையில் இருந்த சிக்கல்களை தீர்த்து வரும் நிலையில் விரைவில் சீரியல் முடிவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேறு சீரியலில் பாக்கியா?
இந்த தகவலைத் தொடர்ந்து பாக்கியாவாக நடித்து சுசீத்ரா ஷெட்டி புதிய சீரியலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகின்றது.
கன்னட சீரியலான இதற்கு சிந்து பைரவி என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், இதன் புரோமோ வெளியாகி உள்ளது.
கபடி விளையாட்டு போட்டிகளுடன் புரோமோ வீடியோ தொடங்குகிறது. கன்னட சேனலான உதயாவின் இந்த தொடர் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |