நான் இனிமேல் வில்லனாக தான் நடிக்க போகிறேன்! பாக்கியலட்சுமி சீரியல் கோபியின் காணொளி
பாக்கியலட்சுமி சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் கோபி அவர் இனிமேல் பாக்கியலட்சுமி சீரியலில் வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடிக்க போகிறார் என காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி எனும் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஸ் ரசிகர்களுக்கு புதிய காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த சீரியல் பல திரப்பங்களுடன் அதிரடியாக போய் கொண்டு இருக்கிறது.
சீரியலில் தற்போது பாக்யா மற்றும் பழனிச்சாமிக்கு திருமணம் நடத்தி வைக்க பழனிசாமியின் அம்மாவும், அக்காவும் முயற்சி செய்தது கோபி மூலமாக பாக்யாவிற்கு தெரிய வருகிறது. இந்தநிலையில், இது குறித்து பழனிசாமியிடம் பாக்யா பேசி இருக்கிறார்.
பழனிச்சாமியும் பாக்யாவை காதலிப்பது போல் சுற்றி வருகிறார். இப்படி விறுவிறுப்புடன் சீரியல் தொடர்கிறது.இந்த நிலையில் நடிகர் சதீஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ”பாக்கியலட்சுமி சீரியலில் இனிதான் பல அதிரடியான திருப்பங்கள், த்ரில்லிங்கான விஷயங்கள் வரப்போகிறது.
மனசுக்கு நெருடலான விஷயங்கள் நடக்கப் போகுது. ஆனால் அதை எல்லாம் நீங்கள் ரசிப்பீர்கள் என்று நினைக்கிறேன். கோபியாக நடிப்பதை எல்லோரும் பாராட்டுகிறீர்கள். எனக்கு அது சந்தோசம்.
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. இனி காமெடியை விடவும் அதிகமாக வில்லத்தனம் தான் நான் செய்யப் போகிறேன். இன்னும் பெட்டரா வில்லனா, காமெடியனா நடிக்க முயற்சிக்கிறேன்.
இதுவரைக்கும் எங்களுக்கு ஆதரவு தந்தது போலவே இனியும் ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும்.” இவ்வாறு அந்த வீடியோவில் சதீஷ் பேசி இருக்கிறார். இதற்கு அவரை பாராட்டி ரசிகர்கள் கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |