நம்ம வீட்டுக்கு வாங்க.. கோபியை நினைத்து வருந்தும் ஈஸ்வரி- இறுதி முடிவு என்ன?
"நம்ம வீட்டுக்கு வாங்க அத்த...” ஈஸ்வரியை மீண்டும் பாக்கியா வீட்டிற்கு அழைக்கிறார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோட்களை கடந்து பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் தற்போது, இனியா தன்னுடைய நிச்சயதார்த்தத்தை நிறுத்துவதற்காக போலீசை வர வைத்திருந்தார். அவர்களும் வந்து, "இனியாவின் விருப்பம் இல்லாமல் யாரும் அவருக்கு திருமணம் செய்து வைக்கக் கூடாது..”எனக் கூறி சென்று விட்டார்கள்.
இப்படியொரு தைரியம் இனியாவுக்கு எப்படி வந்தது என தெரியாமல் குடும்பத்தினர் அனைவரும் திகைப்பில் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, ஈஸ்வரியால் கோபத்தை அடக்க முடியாமல் அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
கோபியும் மகளின் செயலால் மனமுடைந்து என்ன செய்வது என அறியாமல் நெஞ்சை பிடித்தப்படி அவருடைய அறைக்குள் செல்கிறார்.
வீட்டுக்கு அழைத்த பாக்கியா
இந்த நிலையில், ஈஸ்வரியை மீண்டும் வீட்டுக்கு அழைப்பதற்காக பாக்கியா அவரின் அறைக்குள் வருகிறார்.
அப்போது,“ நீங்கள் அனைவரும் சேர்ந்து என்னுடைய மகனை தனியாக்கி விட்டீர்கள். நானும் இல்லாவிட்டால் அவன் எங்கு செல்வான்..” என கூறுகிறார். அதற்கு பாக்கியா, “ உங்களுடைய மகனை அப்படி யாரும் தனியாக இருக்க விடமாட்டார்கள். அவருடைய பிள்ளைகள் மிகவும் நல்லவர்கள் அவரையும் பார்த்துக் கொள்வார்கள்..” என்கிறார்.
ஆனாலும் ஈஸ்வரிக்கு நாளாக நாளாக பயம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இனியாவின் செயலால் மிகுந்த மன வறுத்தத்திற்குள்ளாகும் ஈஸ்வரி அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
