ராதிகாவுடன் மேடை ஏறிய கோபி.. அசிங்கப்படுத்தும் நண்பர்கள்- அவமானத்தில் குறுகிய குடும்பத்தினர்
“உனக்கு இரண்டு அம்மாவா?” என இனியாவை அவருடைய நண்பர்கள் அசிங்கமாக பேசியுள்ளனர்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோட்களை கடந்து சென்று கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலின் கதாநாயகியான பாக்கியாவிற்கு துணையாக அவருடைய குடும்பத்தினர் இருக்கிறார்கள். ஆனால் அவரை “வேண்டாம்” எனக் கூறி இரண்டாம் திருமணம் செய்து கொண்ட கோபி தற்போது குடும்பம் தான் முக்கியம் என அவருடைய மனைவி ராதிகாவுடன் வந்து பாக்கியா வீட்டில் அமர்ந்திருக்கிறார்.
ராதிகாவுடன் பாக்கியா வீட்டில் இருப்பதற்கு 10 நாட்கள் மாத்திரம் வாடகை வழங்கப்பட்டதால் பாக்கியா,“ நீங்க கொடுத்த வாடகை முடிய இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கு.. ” என ஞாபகப்படுத்திச் செல்கிறார். இதற்கு இனியாவும் ஈஸ்வரியும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
ஆனாலும் பாக்கியா மனம் இறங்காமல் அவர் கூற வந்த விடயத்தை கூறிச் செல்கிறார். பாக்கியாவிற்குள் இருக்கும் திறமையை பார்த்து கோபி மிரண்டு போனாலும் அவரை பெறுமைப்படுத்தினாலும் அப்படியான ஆசை வார்த்தைகளுக்கு பாக்கியா மயங்காமல் அவருடைய வேலையில் கவனமாக இருக்கிறார்.
குடும்ப பிரச்சினையால் அவமானப்படும் இனியா
இந்த நிலையில், இனியாவின் நடன நிகழ்ச்சியை பார்ப்பதற்காக குடும்பத்திலுள்ள அனைவரும் செல்கிறார்கள். அதில் ராதிகாவும் அவருடைய கணவர் கோபியுடன் கலந்து கொள்கிறார். அப்போது இனியாவை பாராட்டுவதற்காக அவருடைய பெற்றோர்களை மேடைக்கு அழைக்கிறார்கள்.
அந்த சமயம், இனியாவின் அம்மாவாக ஒரு பக்கம் பாக்கியா செல்கிறார். இனியாவின் அப்பாவாக கோபி அவருடைய மனைவி ராதிகாவுடன் செல்கிறார். இதனை பார்த்த இனியாவின் நண்பர்கள்,“ இனியா எனக்கு ஒரு அம்மா, ஒரு அப்பா தான்... உனக்கு இரண்டு அம்மாவா?” என மேடையில் கலாய்த்து பேசுகிறார்கள்.
இதனை பார்த்த எழில் மற்றும் குடும்பத்தினருக்கு பெறும் அவமானமாக இருக்கிறது. கோபியும் கோபத்தில் நிற்கிறார். ஆனால் அவரால் இனியாவின் நண்பர்களுக்கு பதில் கொடுக்க முடியவில்லை. இப்படியாக இன்றைய நாளுக்கான காட்சி வெளியாகியுள்ளது.
இனி வரும் நாட்களில் என்ன நடக்கும் என்பதனை தொடர்ந்து வரும் எபிசோட்களில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |