சின்னத்திரை நடிகரை கரம்பிடித்த லப்பர் பந்து பட நடிகை
சின்னத்திரை நடிகர் சந்தோஷ் அவருடைய நீண்ட நாள் காதலியான நடிகை மெளனிகாவை திருமணம் செய்து கொண்டார்.
சின்னத்திரை நடிகர் சந்தோஷ்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரஞ்சனி சீரியலில் நாயகனாக அறியப்பட்டவர் தான் நடிகர் சந்தோஷ்.
இவர், இதற்கு முன்னர் அண்ணா சீரியலிலும் நடித்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலிலும் நாயகனாக நடித்திருந்தார். அதில் அவருடன் இணைந்து மனிஷாஜித், திவ்யா பத்மினி ஆகியோரும் நடித்திருந்தார்கள்.
திருமணம்
இந்த நிலையில் சந்தோஷ், நடிகை மெளனிகாவை நீண்ட நாட்களாகவே காதலித்து வந்தார்.
நடிகை மெளனிகா, பிளாக் ஷீப் யூடியூப் சேனல்களின் தொடர்களிலும், கனா காணும் காலம் தொடரிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான “லப்பர் பந்து ” திரைப்படத்தில் நாயகனின் முன்னாள் காதலியாக நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
சந்தோஷ்- மௌனிகா திருமணம் கேரள மாநிலம் குருவாயூர் கோயிலில் எளிமையான முறையில் நடைந்து முடிந்துள்ளது. இவர்களின் திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், திருமண புகைப்படங்களை மெளனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |