மகன் திருமணத்தில் வைப் செய்த செல்வி.. குதூகலத்தில் ஆகாஷ்- இனியா
ட்ரெண்டிங் பாடலுக்கு மகனுடன் வைப் செய்த பாக்கியலட்சுமி செல்வியின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலை பிரபல இயக்குனர் டேவிட் இயக்கி வருவதோடு இதில் முன்னணி கதாபாத்திரமாக நடிகை சுசித்ரா நடித்து வருகின்றார்.
பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் சென்றுக் கொண்டிருந்தது.
இதனை தொடர்ந்து 5 வருடங்களுக்கு பின்னர் நேற்றைய தினம் இறுதி நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியன. ஏகப்பட்ட திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலில், பாக்கியாவிற்கு நண்பியாகவும், வீட்டு வேலைகளை பார்ப்பவராகவும் மீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
அவருடைய மகன் ஆகாஷை இனியா காதலிப்பது போன்ற காட்சிகளும் சீரியலில் வைக்கப்பட்டன. பாக்கியாவிற்கு சம்பந்தியாவார் என சின்னத்திரை ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்பட்ட வேளை, புதிய கதாபாத்திரமாக சுதாகர் நடுவில் வந்து அனைத்தையும் தலைகீழாக மாற்றியிருந்தார்.
திருமணத்தில் வைப் செய்த செல்வி
இந்த நிலையில், தந்தை-தாய் ஆதரவுடன் இனியா விவாகரத்து வாங்கி விட்டு வீட்டில் இருக்க முடிவு செய்த போது, இனியா ரித்திஷை சந்திக்க சென்ற இடத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இருவரும் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். அப்போது இனியாவின் கையை பிடித்து இழுக்க, இனியாவின் கணவர் கீழே விழுந்து இறந்து விட்டார். ஆனால் அவர் இனியா தள்ளிவிட்டதால் இறக்கவில்லை. மாறாக அவரை அவருடைய தந்தையான சுதாகர் தான் கொலை செய்திருக்கிறார் என தெரியவந்துள்ளது.
அதன் பின்னர் செல்வி மகனான ஆகாஷிற்கு இனியாவை திருமணம் செய்து வைக்க முடிவு செய்து திருமணமும் நடக்கவுள்ளது.
இதன்போது எடுத்து கொண்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அத்துடன் சீரியலிலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் செல்வி என்கிற மீனா அவரின் சீரியல் மகனுடன் திருமண மண்டபத்தில் ட்ரெண்டிங்க பாடலுக்கு வைப் செய்து காணொளியை பகிர்ந்துள்ளார்.
இந்த காணொளியை பார்த்த இணையவாசிகள், “அருமையாக இருக்கிறது..” எனக் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
