பாக்யாவிற்கு துணையாக நிற்கும் மாமியார்: மூக்குடைப்பட்டு போகும் கோபி... அசத்தலான ப்ரோமோ காட்சி!
பாக்யா காலேஜ் செல்வது பிடிக்காமல் வயித்தெறிச்சலோடு வந்த கோபியை மூக்குடைத்து அனுப்பியிருக்கிறார் பாக்யாவின் மாமியார்.
பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல் பிரபல தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாக்கியலட்சுமி. இது ஒரு இல்லத்தரசியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடராகும்.
இந்த சீரியல் தொடருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்போடு நாளுக்கு நாள் சுவாரஸ்யம் குறையாமல் நகர்ந்துக் கொண்டிருக்கிறது இந்த தொடர்.
இந்தத் தொடரில் தற்போது பாக்யாவின் நிலைமை அதிரடி காட்டி வரும் பெண் போல காட்டி வருகிறார்கள். கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்ற பெண் கல்வியிலும் தன்னால் ஈடு கொடுத்து வெற்றி பெற முடியும் என கெத்து காட்டி வருகிறார்.
பாக்யாவிற்கு துணையாக இருக்கும் மாமியார்
இந்நிலையில், இன்றைய ப்ரோமோ காட்சியில் பாக்கியாவை கல்லூரிக்கு அனுப்ப கூடாது, அவ பண்றது எல்லாம் தப்பா இருக்கு என தன் அம்மாவிடம் சொல்ல,
அவர் இந்த தடவை பாக்யாவிற்கு சப்போர்ட் பண்ணி “அவ காலோஜ் போனா என்ன தப்பு, அவள் உன்னை மாதிரி திருட்டு தனம் பண்ணல, என்ன நடந்தாலும் நான் பாக்கியா கூடத்தான் இருப்பேன்,எங்களுக்காக வாழ்கிறவள் பாக்கியா” என பெருமையாக பேச கோபி அங்கிருந்து சென்று விட்டார்.
இதைக் மாடியில் இருந்துக் கேட்டுக் கொண்டிருந்த பாக்யா, கீழே இறங்கி வந்து மாமியாரை கட்டிப்பிடித்து அழுகிறார். என அவரை பற்றி பெருமையாக கூற அதனை கேட்டுக்கொள்ளும் பாக்கியா ஈஸ்வரியை வந்து கட்டியணைக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |