வேலைக்காரியுடன் ரொமான்ஸ் நடனம்... பிரபல நடிகரை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
பாக்கியலட்சுமி சீரியல் நடிகரான கோபி அந்த சீரியலில் வேலைக்காரியாக நடிக்கும் நடிகையுடன் ரொமான்ஸாக நடனமாடியுள்ள காணொளி வைரலாகி வருகின்றது.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதுடன், டிஆர்பி-யிலும் குறித்த ரிவி முன்னிலையில் உள்ளது.
அந்த வகையில், இதில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு இல்லத்தரசிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு என்றே கூறலாம். ஆம் நடுத்தர குடும்பத்தில் இல்லத்தரசியாக இருக்கும் பெண் ஒருவர் வீட்டில் குடும்ப சுமையுடன், வெளியில் சாதிக்க துடிக்கும் அருமையான கதையாக சென்று கொண்டிருக்கின்றது.
இந்த தொடரில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சதீஷ். இவர் கதையில் கதாநாயகிக்கு கணவராக நடித்து வரும் நிலையில், தான் காதலித்த பெண்ணுடனும் பழகி வருகின்றார். இதனால் இரண்டு பெண்களையும் சமாளிக்க முடியாமல் தவித்து வருவதோடு, பல பொய்களையும் கூறி வருகின்றார்.
அண்மையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கிய பல பதிவுகளை வெளியிட்டு வருகின்றார். சமீபத்தில் கதையின் கதாபாத்திரத்தில் தான், மனைவிக்கு துரோகம் செய்யும் கணவராக இருக்கிறேன்... ஆனால் இதனை மனதில் வைத்துக்கொண்டு ரசிகர்கள் என்னை திட்டுவது நியாயமா? என்று பாவமாக காணொளி வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த சீரியலில், வேலைக்காரியாக நடித்து வரும் நடிகையான, கம்பம் மீனா என்பவருடன் ரொமான்ஸ் பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரைலாகி வருகிறது.
இதனை அவதானித்த ரசிகர்கள் மறுபடியும் திட்ட தொடங்கியுள்ள நிலையில், இது மனைவி பாக்கியாவிற்கு தெரியுமா என்றும் கிண்ல் செய்து வருகின்றனர்.