இவ்வளவு பிஸியா இவங்க.. பாக்கியலட்சுமி ராதிகா என்ன செய்றாங்க தெரியுமா?
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான ரேஷ்மா தற்போது என்ன செய்கிறார் என்ற விவரங்களை அவரே பேட்டியொன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
நடிகை ரேஷ்மா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாக்கியலட்சுமி” என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை ரேஷ்மா.
இவர், கோபியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டாலும் மாமா - மாமி வீட்டில் தன்னுடைய உரிமையுடன் வாழ நினைக்கும் வில்லியாக சீரியலில் நடித்து வருகிறார்கள்.
ராதிகாவின் நடிப்பிற்கும், பாக்கியாவின் நடிப்பிற்கும் இந்த சீரியல் ஒரு களம் என்றே கூற வேண்டும்.
கோபியின் அலப்பறைகள் தாங்க முடியாமல் கோபியை விவாகரத்து செய்து விட்டு தன்னுடைய மகளுடன் மீண்டும் ராதிகா தனியாக சென்று விட்டார். கடந்த எபிசோட்களில் ராதிகா என்ற கதாபாத்திரம் வராத காரணத்தினால் அவருடைய ரசிகர்கள் கவலை வெளியிட்டு வருகிறார்கள்.
ரேஷ்மா நடிகை மட்டுமல்ல..
இந்த நிலையில் சீரியலில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் ராதிகா, அவருடைய சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்கள் பகிர்வார்.
அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மைனா நந்தினி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட பொழுது சீரியலில் நடிப்பது தவிர வேறு என்னென்ன தொழில்கள் செய்கிறீர்கள்? என கேட்ட போது ரேஷ்மா அதற்கு, “ நான் Luxcry saloon ஒன்றை ஆரம்பித்துள்ளேன்.
அதற்கான வேலைபாடுகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. அத்துடன் சேலை கட்டூர் என்ற பெயரில் சேலை கடையொன்றையும் நிர்வகித்து வருகிறேன். அத்துடன் உணவு தொடர்பான வியாபாரம் ஒன்றை பார்த்துக் கொண்டிருக்கிறேன்..” என்றும் பேசியிருக்கிறார்.
பதில் கேட்ட மைனா நந்தினியே வாயடைத்து போய் உள்ளார். சீரியலில் நடித்துக் கொண்டு இப்படி செய்வது வியப்பாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |