நான் முக்கியமா? இவங்க முக்கியமா? இனியா கேட்ட கேள்வி! அதிர்ச்சியில் கோபி
பாக்கியலட்சுமி சீரியலில் இனியா ராதிகாவுடன் கடுமையாக சண்டையிட்டுள்ள காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் கணவர் தொடர்பு வைத்துள்ள கதையாக காட்டப்பட்டு வந்தது.
பின்பு தனது முன்னாள் காதலியையே இரண்டாவது திருமணம் கதாநாயகன் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில், அவருடன் வசித்து வருகின்றார்.
கோபியின் இந்த செயலால் ரசிகர்கள் அவரைக் கடுமையாக திட்டித் தீர்த்து வருகின்றனர். தற்போது வீட்டில் சண்டைபோட்டுக் கொண்டு கோபியுடன் வசித்து வருகின்றார் இனியா.
ராதிகாவை திட்டிய இனியா
இனியாவின் தவறை புரிய வைப்பதற்கு அவரது தாத்தா, கோபி தனது இரண்டாது மனைவியுடன் வசிக்கும் வீட்டிற்கே சென்றுள்ள நிலையில், அங்கு தனது பாணியில் கலாட்டா செய்து வருகின்றார்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சியில் ராதிகாவிற்கு இனியாவிற்கு காபி கொடுத்துள்ளார். அதனை இனியா குடிக்காமல் அப்படியே வைத்துள்ள நிலையில், ராதிகா கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு இனியா என்னை சத்தம் போட நீங்க யாரு என்று கேட்டதுடன், கோபி வந்ததும், உங்களுக்கு நான் முக்கியமா? அவங்க முக்கியமா? இப்பவே தெரியணும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.