மருத்துவமனையில் கோபி.. மீண்டும் அழைத்து வர ஈஸ்வரி திட்டம்! கொதிப்பில் பாக்கியா!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோபியை மீண்டும் பாக்கியாவின் வீட்டிற்கு அழைத்து வர ஈஸ்வரி திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முதல் இடத்தை பாக்கியலட்சுமி சீரியல் பிடித்து கொள்கின்றது.
இந்த சீரியல் மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் பாக்கியா, எவ்வளவு குடும்ப தடைகள் வந்தாலும் குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்காக தன்னுடைய வாழ்க்கை அர்ப்பணித்து வாழ்ந்து வருகிறார்.
ஆனால் கோபி இவையனைத்தையும் கணக்கெடுக்காமல் இரண்டாவது மனைவி அவரின் குழந்தைகள் என வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு கோபி மருத்துவமனையில் இருக்கிறார். இதனால் ஈஸ்வரி, செழியன் ஆகிய இருவரும் சென்று பார்த்து விட்டு வருகிறார்கள்.
கோபியை அழைத்து வர திட்டம்
ராதிகாவுடன் இருந்த காரணத்தினால் தான் மாரடைப்பு ஏற்பட்டது என கூறிய மீண்டும் பாக்கியாவின் வீட்டிற்குள் கோபியை அழைத்து வர திட்டம் போடுகிறார்.
இதற்கு பாக்கியாவும் எழிலும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால் ஈஸ்வரி கேட்பது போல் தெரிகிறது.
இதனை தொடர்ந்து கோபி வீட்டிற்குள் வர அடுத்த நொடி வீட்டை விட்டு வெளியேறுவேன் என பாக்கியா சபதம் போட்டுள்ளார்.
இப்படியொரு பரபரப்புடன் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. “ இனி என்ன நடக்க போகுது?” என ரசிகர்களும் கருத்துக்களை பதிவு செய்து தருகின்றார்கள்.