ட்ரைவருக்கு வந்த போன் கோல்.. அதிரடியாக களத்தில் இறங்கிய பாக்கியா- இனி நடக்க போவது என்ன?
ட்ரைவருக்கு வந்த போன் கோலால் பாக்கியா அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளார்.
பாக்கியலட்சுமி
சினிமாவை விட மக்கள் அதிகம் விரும்பி பார்ப்பது சின்னத்திரையாக மாறியுள்ளது.
இதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சிகளில் நாளுக்கு நாள் புதிய புதிய சீரியல்கள் உருவாக்கம் பெற்று வருகின்றது.
அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் பாக்கியலட்சுமி சீரியல் முதல் இடத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றது.
இதில் பாக்கியா, கோபி, ராதிகா, செழியன் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்கள்.
கேரளா வரை காரில் தனியாக செல்லும் பாக்கியா
இந்த நிலையில், இனியாவை பாக்கியா மற்றும் ஈஸ்வரி ஆகிய இருவரும் காரில் அழைத்து கொண்டு செல்கிறார்கள்.
அப்போது ரைவருக்கு ஒரு போன் கோல் வருகின்றது. இதன் காரணமாக அவர் வண்டியை பாதியில் விட்டு விட்டு ஒட்டுநரின் அப்பாவை பார்க்க சென்று விடுகிறார்.
இதனை தொடர்ந்து பாக்கியா, பழனிச்சாமிக்கு கோல் செய்கிறார். பாக்கியாவிற்கு வண்டி ஓட்ட தெரியும் என்பதால் பாக்கியாவை காரை எடுக்கும் படி பழனிச்சாமி கூறுகிறார்.
பழனியின் பேச்சை கேட்டு, பாக்கியா கேரளா வரை தனியாக காரை எடுத்து செல்கிறார்.
தொடர்ந்து என்ன பிரச்சினைகள் வரவிருக்கின்றது என்பதனை தொடர்ந்து வரும் எபிசோட்களை பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |