எந்த தைரியத்துல வந்த... கோபியை கொதிப்புடன் திட்டியனுப்பிய ஈஸ்வரி- பாக்கியா செய்யும் பலகாரங்கள் யாருக்காக?
மயூவின் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு வருகை தர வேண்டும் என அழைக்க வந்த கோபியை ஈஸ்வரி திட்டியனுப்பியுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாக்கியலட்சுமி.
இது ஒரு இல்லத்தரசியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடராகும்.
அத்துடன் பாக்கியா, பணத்தேவைக்காக கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறார். அதுமட்டுமன்றி இது பாக்கியாவின் சிறுவயது ஆசை எனவும் கூறி வருகிறார்.
இந்த நிலையில் இனியாவிற்கு கல்லூரியிலிருந்து ஒரு வேலை கொடுக்கிறார்கள்.
கொதிப்புடன் கத்திய ஈஸ்வரி
அந்த வேலையாக அவர் கேரளாவிற்கு செல்ல வேண்டியுள்ளது. அப்போது இனியா, கோபியை அழைத்து உதவி கேட்கிறார்.
இது ஒருபுறம் இருக்கையில், மயூவின் மஞ்சள் நீராட்டு விழா வந்துள்ளது. இதன் காரணமாக கோபியால் இனியாவை அழைத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இப்படியொரு நிலையில், ராதிகா வீட்டு விஸேசத்திற்கு ஈஸ்வரியை அழைப்பதற்காக கோபி, பாக்கியாவின் வீட்டிற்கு வருகிறார்.
விடயத்தை பொறுமையாக கேட்ட ,ஈஸ்வரி,“ எந்த தைரீயத்தில் எங்கள ராதிகாவின் வீட்டிற்கு அழைக்க வந்த...” என கொதிப்புடன் கூறுகிறார்.
மனமுடைந்து கோபி வீட்டை விட்டு வெளியேறுகிறார். ஆனால் பாக்கியா மயூவிற்காக பலகாரங்கள் செய்து ஈஸ்வரியின் கையில் கொடுத்து அனுப்புகிறார்.
அந்த வகையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |