பாக்கியாவிடம் அனைத்து உண்மைகளை உளறிய கோபி: அடுத்தடுத்து அதிரடி திருப்பம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் கோபி மனவேதனையுடன் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் கணவர் தொடர்பு வைத்துள்ளதாக எடுக்கப்பட்டுள்ளது.
பாக்கியாவிற்கு கோபி செய்யும் துரோகத்தால் ரசிகர்கள் அவரைத் திட்டித் தீர்த்து வருகின்றனர். இதனால் சமீபத்தில் அவர் மனவேதனையுடன் காணொளி ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

உண்மையை அறிந்த பாக்கியா
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான ப்ரொமோ காட்சியில் கோபி மது அருந்திவிட்டு ராதிகா வீட்டில் தகராறு செய்த நிலையில், இறுதியில் தனது குடும்ப புகைப்படத்தினையும் காட்டினார்.
தற்போது வெளியான ப்ரொமோ காட்சியில் குடிபோதையில் தனது வீட்டிற்கு வந்த கோபி, அனைத்து உண்மைகளையும் போதையில் உளறியுள்ளார். இதனைக் கேட்ட பாக்கிய பயங்கர அதிர்ச்சியில் காணப்படுகின்றார்.