Baakiyalakshmi: பாக்கியலட்சுமி சீரியலின் கடைசி புகைப்படம்... சோகத்தில் கோபி
பாக்கியலட்சுமி சீரியலின் கடைசியாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தினை கோபி தனது இன்ஸ்டாபக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண், கணவர் விட்டுச் சென்ற பின்பும் தனது விடாமுயற்சியினால் சொந்த உழைப்பில் குடும்பத்தை காப்பாற்றி வருவது கதையாகும்.
கோபி தற்போது பாக்கியாவுடன் இருந்து வரும் நிலையில், இனியாவிற்கு செய்து வைத்துள்ள திருமணம் தற்போது பிரச்சனையாகியுள்ளது.
கணவர் போதை பழக்கத்திற்கு அடிமையான விடயத்தை அறிந்த இனியா விவாகரத்து செய்வதற்கு நீதிமன்றம் சென்றுள்ளார்.
ஒரு கட்டத்தில் மீடியாவிற்கும் சென்று தனது வாழ்க்கையில் நடந்த கதையினைக் கூறியுள்ளார். கடைசியாக கணவரை இனியா அடித்து உயிர் போவது போன்ற ப்ரொமோ வெளியானது.
இந்நிலையில் குறித்த சீரியலில் கோபி கடைசியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
