வலியால் துடிதுடித்த ஜெனிஃபர்! ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ராதிகா
பாக்கியலட்சுமி சீரியலில் கர்ப்பிணியாக நடித்து வரும் ஜெனிஃபர் கீழே விழுந்து துடித்த நிலையில் ராதிகா அவரை அழைத்துக்கொண்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களை கவர்வதில் நம்பர் ஒன் ஆக இருக்கின்றது. குறித்த சீரியலில் ராதிகா தற்போது கோபியுடன் பாக்கியா வீட்டில் வசித்து வருகின்றார்.
பாக்கியாவின் மூத்த மருமகள் ஜெனிஃபர் கர்ப்பமாக இருக்கும் நிலையில், கீழே விழுந்து விடவே வலியால் துடிக்கின்றார். இந்நிலையில் அவரை பார்த்த ராதிகா அவரை அழைத்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
மேலும் பாக்கியாவிற்கு போன் செய்து தகவலையும் கூறியுள்ளார். ராதிகாவின் குறித்த மாற்றம் சீரியலிலும் மாற்றம் ஏற்படுமா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.