Baakiyalakshmi: காலில் விழுந்து கதறிய செழியன்! பளார் பளார்னு அறைந்த ஜெனி
பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி செழியன் இருவரும் பயங்கர சண்டைக்கு பின்பு மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
பாக்கியாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்து வசித்து வருகின்றார்.
ஜெனிபர் மற்றும் செழியனின் வாழ்க்கை கதை தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இன்றைய எபிசோட்டில் ஜெனியின் பேச்சு ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது.
பயங்கரமாக பேசிய ஜெனி
செழியன் ஜெனி இருவரையும் சந்திக்க ஏற்பாடு செய்த இரு குடும்பத்தினரும், ஒரு அறைக்குள் கொண்டு விட்டுள்ளனர்.
கதவைத் திறக்கக் கோரி ஜெனி கோபத்தில் செழியனை சத்தம் போட, கதவு வெளியே பூட்டிட்டு எப்படி உள்ளே வரமுடியும் என்று கேட்டுள்ளார்.
பின்பு ஜெனியிடம் தயவு செய்து தான் பேசுவதை கேட்கக் கோருகின்றார். உடனே கோபப்பட்ட ஜெனி என்னைவிட அந்த மாலினி முக்கியமாக போயிட்டாலா... என்றும் உன்னை மன்னிக்கு முடியாது என்று கூறிய ஜெனியின் காலில் விழுந்து செழியன் கதறியுள்ளார்.
பின்பு செழியன் கன்னத்தில் பளார் பளார்னு அறைந்துள்ளார். அறைக்குள் நடக்கும் அனைத்தையும் வெளியே இருந்து அனைவரும் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.
இருவரும் சண்டை அடங்கி சத்தம் இல்லாமல் இருந்த தருணத்தில் ஜெனியின் தாய், பாக்கியா கதவை திறந்து பார்த்த போது இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.
ஆக மொத்தம் இன்றைய எபிசோட் ரசிகர்கள் எதிர்பார்த்தது போன்று நடந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |