புட்டுபுட்டு வைத்த இனியா.. நடுங்கிய போன சுதாகர் குடும்பம்- பூகம்பம் மீண்டும் வெடிக்குமா?
பாக்கியலட்சுமி சீரியலில் இனியா தன்னுடைய திருமண வாழ்க்கை பற்றிய அனைத்தையும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறி விடுகிறார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இன்னும் சில எபிசோட்களில் நிறைவுக்கு வரவிருக்கிறது.
பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வரப்போகிறது என்ற செய்தி கடந்த சில வருடங்களாக சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக இருந்தது.
அந்த சம்பவம் நடக்க வாய்ப்பே இல்லப்பா என்பது போல தான் கதைக்களம் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் இப்போது ஒரு வழியாக இந்த சீரியல் முடிவுக்கு வருகிறது.
மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் எமது சமூகங்களில் நடக்கும் யதார்த்தமான கதையாக இருந்தது. ஒரு குடும்பத் தலைவி தன்னுடைய குடும்பத்திற்காக படும் அவமானங்கள், உழைப்பு என எல்லாவற்றையும் இந்த சீரியலில் அழகாக காட்டியிருப்பார்கள்.
இவற்றையெல்லாம் தாண்டி தன்னுடைய சுய கௌரவத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் போது ஏற்படும் பிரச்சனைகள் பற்றி இந்த சீரியலில் அழகாக காட்டப்பட்டிருக்கிறது.
புட்டுபுட்டு வைக்கும் இனியா
இந்த நிலையில், கணவர் குடும்பத்தினர் மீது கடும் கோபத்தில் இருக்கும் இனியா அவருடைய ஊடகத்தை பயன்படுத்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அனைத்தையும் கூறுகிறார்.
தன்னை பிடித்து திருமணம் செய்யவில்லை என்றும் போதைப்பழக்கத்தில் உள்ள தன்னுடைய மகனுக்கு வேறு பெண் கிடைக்கவில்லை. இதனால் தான் என்னுடைய குடும்பத்தினரிடம் பொய் கூறி திருமணம் செய்தார்கள் என்றும் கூறியுள்ளார்.
இவற்றையெல்லாம் தொலைக்காட்சியில் பார்க்கும் சுதாகர் மற்றும் அவரின் மனைவிக்கு பயம் கிளம்புகிறது. இனியா இந்த நிகழ்ச்சியில் அனைத்தை விடயங்களையும் கூறிய பின்னர் சில வேளைகளில் சுதாகர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாக்கியாவை போன்று தனக்கு நடக்கும் அநியாயங்களை இனியாவும் தட்டிக் கேட்ட ஆரம்பித்து விட்டார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
