நீதிமன்றத்தில் கோபியை தலைகுனிய வைத்த பாக்கியா! பரபரப்பாக ப்ரொமோ காட்சி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா நீதிமன்றத்திற்கு சென்று கோபியை விவாகரத்து செய்வதற்கு சம்மதம் கூறி அதிரடி காட்டியுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் கணவர் தொடர்பு வைத்துள்ளதாக எடுக்கப்பட்டுள்ளது.
பாக்கியாவிற்கு கோபி செய்யும் துரோகத்தால் ரசிகர்கள் அவரைத் திட்டித்தீர்த்து வந்த நிலையில், தற்போது குடும்பத்தில் அனைவருக்கும் உண்மை தெரியவரவே பெரும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றது.
நீதிமன்றத்தில் பாக்கியாவின் அதிரடி
இன்று வெளியாக ப்ரொமோ காட்சியில் பாக்கியா தைரியமாக நீதிமன்றத்திற்கு கோபிக்கு விவாகரத்து கொடுத்துள்ளார்.
பாக்கியா எடுத்துள்ள இந்த திடீர் முடிவு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாக்கியாவின் புதிய அவதாரம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பினையும் பெற்று வருகின்றது.
மேலும் இதற்கு பின்பு குறித்த சீரியல் எவ்வாறு செல்லப்போகின்றது என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.