5 வயதில் நடந்த சோகம்! பாக்கியலட்சுமி கோபியை பற்றி நீங்கள் அறிந்திராத பின்னணி
பிரபல தொலைக்காட்சியொன்றில் இல்லத்தரசிகளின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
ஆரம்பம் முதல் இன்று வரை அடுத்தடுத்து சுவாரஸ்யமாக நகர்த்துக்கொண்டு இருக்கிறது. சீரியலில் தற்போது ராதிகா பாக்கியாவுக்கு எதிராக சதிசெய்யும் காட்சிகள் வெளியாகி வருகின்றது.
இதில் பாக்கியாவின் கணவராக நடித்து வருபவர் தான் கோபி. அவரின் உண்மையான பெயர் சதீஷ். இவர் சிறந்த குணச்சித்திர நடிகராக சினிமாவில் வலம் வந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தவர். அதன்பிறகு 2000 ஆம் ஆண்டு சின்னத்திரையில் அறிமுகமானார்.
பாக்கியலட்சுமி சீரியல் தான் இவருக்கு பெரிய திருப்புமுனையாக இருந்தது. இந்த சீரியலில் அவரின் நடிப்பால் பல ரசிகர்கனை சம்பாதித்து வைத்திருக்கிறார். மேலும் பலர் இவரின் கதாபாத்திரம் குறித்து திட்டித்தீர்த்த வண்ணம் இருக்கின்றனர்.
இந்நிலையில்,ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் தன்னைப்பற்றி பலருக்கும் தெரியாத சில விடயங்களை தெரிவித்துள்ளார்.
இவர் தனது 5 வயதில் விபத்தொன்றில் தாய் தந்தையரை இழந்துள்ளார்.
அதன்பிறகு ஒரே ஒரு சட்டையும், காற்சட்டையுடன் சென்னையில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு வந்து சேர்ந்துள்ளார். எனது தாய் தந்தைப்போல் என்னை அத்தை தான் வளர்த்தார்.
எனக்கு தமிழ் தெரியாது. அத்தை தான் எனக்கு தமிழ் பேச சொல்லிக் கொடுத்தார். தமிழ் ஒரு மொழி அல்ல கலாச்சாரம், சக்தி, உணர்வு எல்லாமே என தெரிவித்துள்ளார். அத்தைத் தான் தனக்கு எல்லாமே அவர் மிகச்சிறந்த பெண்மணி எனவும் தெரிவித்துள்ளார்.
இதுவரைக்காலமும் கோபியை திட்டிக்கொட்டிய ரசிகர்கள் தற்போது அவரின் உருக்கமாக தகவலைக் கேட்டு அவருக்கு ஆறுதலாகவும் ஆதரவாகம் பதிவிட்டு வருகிறார்கள்.