கண்கலங்கி நிற்கும் பாக்கியா! ராதிகா எடுத்த அதிரடி முடிவு: பரபரப்பான ப்ரொமோ
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவிற்காக அதிரடி முடிவு ஒன்றினை ராதிகா எடுத்துள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் கணவர் தொடர்பு வைத்துள்ளதாக எடுக்கப்பட்டுள்ளது.
பாக்கியாவிற்கு கோபி செய்யும் துரோகத்தால் ரசிகர்கள் அவரைத் திட்டித் தீர்த்து வருகின்றனர். இதனால் சமீபத்தில் அவர் மனவேதனையுடன் காணொளி ஒன்றினை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் கோபியின் உண்மையான மனைவி பாக்கியா என்பதை அறிந்து கொண்ட ராதிகா அடுத்தடுத்து அதிரடியாக சம்பவங்களை செய்து வருகின்றார்.
சமீபத்தில் ராதிகா கோபியை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிட்ட ப்ரொமோ வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியது.
பாக்கியாவிற்காக ராதிகா எடுத்த முடிவு
தற்போது தனது தாயின் பேச்சைக் கேட்டு பாக்கியாவிற்கு, ராதிகா துரோகம் செய்துவிடுவாரோ என்ற எண்ணம் எழுவது போன்று கதைகள் நகர்ந்து கொண்டிருந்தது.
இக்காட்சிகள் சற்று இல்லத்தரசிகளை கடுப்படைய செய்ததோடு, பலரும் திட்டித் தீர்த்து வருகின்றனர். இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆம் ராதிகா பாக்கியாவை கோவிலில் சந்தித்து, தான் இந்த ஊரைவிட்டு செல்வதாக கூறி அதிர்ச்சி கொடுத்ததோடு, இனிமேல் உங்க வாழ்க்கையில எந்த பிரச்சினையும் வராது என்று கூறி பாக்கியாவிற்கு ஆறுதலும் கூறியுள்ளார்.