சிவகார்த்திகேயன் பாணியில் ரீ- என்றி கொடுக்கும் பிரியங்கா- புது ஷோவின் கலக்கல் ப்ரோமோ
சிவகார்த்திகேயன் பானியில் இறங்கிய பிரியங்காவின் புது நிகழ்ச்சியின் ப்ரோமோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிரியங்கா
சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக இருந்தவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே.
இவர், சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் ம்யூசிக் போன்ற பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். சின்னத்திரையில் எவ்வளவு ஆக்டிவாக இருந்தாலும் பிரியங்கா, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவ்வளவு ஆக்டிவாக இருக்கிறார்.
இதற்கிடையில், கடந்த மாதம் இலங்கை தமிழரான வசி என்பவரை காதலித்து மறுமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கோலாகலமாக நடக்காவிட்டாலும் நண்பர்கள் மற்றும் நெருக்கமான உறவினர்கள் கலந்து கொண்டார்கள்.
சிவகார்த்திகேயன் பானியில் வெளியான ப்ரோமோ
பிரியங்கா, சின்னத்திரையில் என்ன மாற்றம் நடந்தாலும் அதனை கண்டுக் கொள்ளாமல் தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கங்கள் படு ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியின் ப்ரோமோவை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் பட பானியில் வெளியிட்டுள்ளார். நிலாவில் ஆயா வடை கடை இருப்பதாகவும் அங்கு சென்று நிகழ்ச்சியை விளம்பரப்படுத்துவதாகவும் காட்டப்படுகிறது.
திருமணத்திற்கு பின்னர் பிரியங்காவின் ரீ- என்றி இப்படி இருக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |