நள்ளிரவில் குடிபோதையில் நடுரோட்டில் கோபி! கலங்க வைக்கும் பாசப்போராட்டம்
பாக்கியலட்சுமி சீரியிலில் மீண்டும் பிரச்சினையால் கோபி குடித்துவிட்டு நடுரோட்டில் விழுந்து கிடக்கும் காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நாயகனாக நடித்திருக்கும் கோபி ரசிகர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட நபராக இருந்து வந்தார்.
குறித்த சீரியல் அனைத்து பெண்களையும் கவர்ந்துள்ள நிலையில், அன்றாடம் குடும்ப பெண்கள் சந்திக்கும் பிரச்சினையை வெளியே எடுத்துக் காட்டி வருகின்றது.
இதில் பாக்கியாவிற்கு கணவராக நடிக்கும் கோபி ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து வந்த நிலையில், தற்போது பாக்கியா வீட்டிலேயே ராதிகாவுடன் வசித்து வருகின்றார்.
பாக்கியாவிற்கு நண்பராக நடிகர் ரஞ்சித்தை களமிறக்கி விறுப்பாக செல்லும் இக்கதையில் பல மாற்றங்களை இயக்குனர் செய்து வருகின்றனர்.
கதையின் விறுவிறுப்பு குறையாமல் கொண்டு செல்லப்படும் இந்த சீரியலின் தற்போதைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
ராதிகாவை வீட்டைவிட்டு வெளியேற்றிய கோபி தாங்கமுடியாத மனக்குழப்பத்தினால் மீண்டும் மது அருந்திவிட்டு பூங்கா ஒன்றில் போதையில் படுத்துள்ளார்.
கோபியை தேடி அவரது தாய் ஈஸ்வரியும், மூத்த மகன் செழியனும் சென்று அவரைத் தேடி வீட்டிற்கு அழைத்து வருகின்றனர். போதையில் கோபி தனது தாயிடம் நிகழ்த்தும் கொமடி வேறலெவலில் இருந்து வருகின்றது.