Baakiyalakshmi: கோபிக்கு மீண்டும் வந்த மாரடைப்பு... பாக்கியாவிடம் கைகூப்பி கெஞ்சும் ஈஸ்வரி
பாக்கியலட்சுமி சீரியலில் கோபியை பாக்கியா வீட்டை விட்டு கிளம்ப கூறிய நிலையில், திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் வீட்டில் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அவர் துணையில்லாமல் வாழ்ந்து காட்டும் கதையை கொண்டு செல்கின்றது.
கணவர் எவ்வளவு தான் கெட்டவனாக இருந்தாலும், தான் செய்ய வேண்டிய கடமைகளை தற்போது வரை பாக்கியா சரியாக செய்து அசத்தி வருகின்றார்.
தற்போது கோபி பாக்கியாவின் வீட்டில் இருந்து வரும் நிலையில், அவரை ஒரு வாரத்திற்குள் வீட்டை விட்டு செல்லுமாறு பாக்கியா கூறியுள்ளார்.
மேலும் கோபி பாக்கியாவிற்காக காபி போட்டு கொடுத்த நிலையில் அதையும் கீழே ஊற்றியுள்ளார்.
இந்நிலையில் கோபிக்கு தற்போது நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் பாக்கியாவிடம் ஈஸ்வரி கையெடுத்து கெஞ்சியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |