என்னை எல்லோரும் சேர்ந்து இப்படி பண்ணீட்டாங்க! வீடியோவில் புலம்பும் பாக்கியலட்சுமி கோபி
நான் சொன்னதை வைத்து எல்லோரும் என இப்படி பண்ணீட்டாங்களே என பாக்கியலட்சுமி கோபி புலம்பும் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பாக்கியலட்சுமி சீரியலிலிருந்து விலகும் கோபி
பிரபல தொலைகாட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலில் உள்ள சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியா - கோபி இருவரும் கதாநாயகர்களாக நடித்து வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து புதிய திருப்பமாக பாக்கியா - கோபி - ராதிகா என மூன்று கதாபாத்திரங்கள் வைக்கப்பட்டது.
தற்போது பாக்கியாவிற்கு துணையாக பழனிசாமி என்ற கதாபாத்திரம் வைக்கபட்டுள்ளது. 40 வயதை தாண்டிய இரு ஜோடிகள் தனது வாழ்க்கைக்கு தேவையான ஒரு துணையை தேர்ந்தெடுக்கும் வகையில் இந்த சீரியலின் கதைக்களம் கொண்டு செல்லப்படுகிறது.
பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் பாக்கியா எனும் சுஜித்ராவிற்கு சீரியலில் நிறைய சீன்கள் வைக்கப்படுகிறது.
இவர் தான் தற்போது இருக்கும் இல்லத்தரசிகளுக்கு சிறந்த முன்னுதாரணமாக இருந்து வருகிறார்.
எனக்கான சீன்கள் இனி குறையும்
இந்த நிலையில் சமிபத்தில் பாக்கியலட்சுமி சீரியலில் எனக்கான சீன்கள் இனி குறைய ஆரம்பிக்கும். மேலும் நடிகர் ரஞ்சித்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தான் இனி பாக்கியலட்சுமி சிரியல் நகரும்.
நான் ஓய்வெடுக்க போகிறேன் எனக் கூறி பாக்கியட்சுமி சீரியல் கோபி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதனை சக ஊடகங்கள் ட்ரோல் செய்து வருவதால் அது நடிகர் சதிஸ்க்கு கஷ்டமாக இருப்பதாகவும் இனி இவர்களுக்கு எப்படி இதனை சொல்லி புரிய வைப்பது என எனக்கு தெரியவில்லை என மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், “இப்போது நீங்க சீரியலை விட்டு விலக வில்லையா?” என கமண்ட் செய்து வருகிறார்கள்.