பாக்கியலட்சுமி நடிகையின் மகனுக்கு திருமணம்! கொண்டாட்ட புகைப்படங்கள்
பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரியாக அசத்தி வரும் ராஜலட்சுமியின் மகனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரியாக அசத்தி வருபவர் ராஜலட்சுமி.
வில்லத்தனம் செய்யும் மாமியார், மகன் மீது அதீத பாசம் என பல கோணங்களில் பாராட்டுகளை அள்ளி வருகிறார் ராஜலட்சுமி.
சுஜாதா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இதுவரையிலும் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
அறிமுகமான முதல் தெலுங்கு படத்திலேயே தேசிய விருதை வென்ற ராஜலட்சுமி, கடைசியாக 2021ம் ஆண்டு வெளியான இருவர் உள்ளம் படத்தில் நடித்திருந்தார்.
இவருக்கு ரோகித், ராகுல் என இரு மகன்கள் இருக்கின்றனர், இதில் மூத்த மகன் ரோகித்தின் திருமணம் ஐதராபாத்தில் கோலாகலமாக நடந்தது.
இத்திருமண வைபத்தில் பாக்கியலட்சுமி குழுவினர் கலந்துகொண்டனர், இதுதொடர்பான புகைப்படங்களை கம்பம் மீனா இன்ஸ்டாவில் பதிவிட பலரும் புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துகளை கூறிவருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |