Baakiyalakshmi: கமலாவை அடிக்க கை ஓங்கிய கோபி: சட்டையை பிடித்த ராதிகா- உச்சக்கட்ட பரபரப்பு
ஈஸ்வரியை தவறாக பேசியதால் கடுப்பான கோபி மாமியாரை அடிக்கச் சென்றுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோடை கடந்து ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டதால் இன்று வரை சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
அந்த வகையில், ராதிகாவின் கர்ப்பம் கலைந்த பின்னர் ராதிகாவும் அவரது அம்மா- கமலாவும் இணைந்து ஈஸ்வரியை அவமானப்படுத்தி வீட்டை விட்டு வெளியில் அனுப்பியுள்ளனர்.
இதனால் ஈஸ்வரி, கோபி இருவரும் மனமுடைந்து போயுள்ளனர். அடுத்து என்ன செய்வது? என தெரியாமல் புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள்.
அடிக்கச் சென்ற கோபி
இந்த நிலையில், ராதிகா அம்மா “ ஈஸ்வரி ஒரு கொலைகாரி..” என கோபியிடம் கூறுகிறார். இவர் இப்படி கூறுவதை கேட்ட கோபி கடுப்பாகி அடிப்பதற்கு கை ஓங்கியுள்ளார்.
தன்னுடைய அம்மாவை அடிப்பதற்கு கை ஓங்கிய கோபியை பார்த்து ராதிகா அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது ஒரு புறம் இருக்கையில், ஈஸ்வரியும் பாக்கியாவும் சாவித்திரியை பார்த்து ஈஸ்வரியின் பழைய நினைவுகளை பேசி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படியே சென்றால் கோபியின் நிலை என்னவாகும் என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |