கோபிக்கு பாக்கியா வைத்த நெருக்கடி! உடையும் உண்மைகள்.. வெளியான புதிய ப்ரொமோ
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் நடவடிக்கையை அவதானித்த பாக்கியலட்சுமி உண்மையை கூறுமாறு நெருக்கடி கொடுத்திருக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் கணவர் தொடர்பு வைத்துள்ளதாக எடுக்கப்பட்டுள்ளது.
பாக்கியாவிற்கு கோபி செய்யும் துரோகத்தால் ரசிகர்கள் அவரைத் திட்டித் தீர்த்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் ராதிகாவிற்கு உண்மையை தெரிந்த நிலையில், கோபியை வீட்டைவிட்டு வெளியே அனுப்பியுள்ளார்.

சந்தேகத்தில் பாக்கியா
கோபியின் நடவடிக்கை சரியில்லாமல் இருக்கும் நிலையில், பாக்கியா கோபியை கண்காணித்து வருகின்றார்.
மேலும் கோபியிடம் வந்து உண்மையை கூறுமாறும் கேட்டு நெருக்கடி கொடுக்கின்றார். ராதிகாவின் வீட்டில் ராதிகா அம்மா கோபியை திருமணம் செய்து கொள்ள மனதை மாற்றி வருகின்றார்.
தற்போது பாக்கியாவிற்கு உண்மையை தெரிந்த பின்பு கோபியை விட்டுக்கொடுப்பாரா? அல்லது கோபி பாக்கியாவை விட்டுச் செல்வாரா என்ற கேள்வி எழுந்து வருகின்றது.