Mr. கோபிநாத்... Who are you... திருமண நிகழ்வில் பொங்கி எழுந்த பாக்கியா! நடுநடுங்கிய கோபி
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி பாக்கியாவிடம் வந்து வாக்குவாதம் செய்த நிலையில் ஒரு கட்டத்தில் கொந்தளித்த பாக்கிய கோபியை சரமாரியாக பேசி சத்தம் போட்டுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னனியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று அவரை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து ஒரே வீட்டில் வசித்து வருகின்றார். இதில் ராதிகாவிற்கும் கோபியின் அம்மாவிற்கும் இடையே நடக்கும் சண்டை தற்போது ரசிகர்களிடையே சுவாரசியத்தை அதிகரித்து வருகின்றது.
இந்த சண்டை உச்சக்கட்டடை அடைந்து ஒரு கட்டத்தில் ராதிகா கோபியின் அம்மாவை மரியாதை இல்லாமல் பேசியுள்ளார். இந்நிலையில் குறித்த வீட்டை தன்வசப்படுத்த பாக்கியா ஒரு மாதத்தில் 20 லட்சம் சேர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
பாக்கியாவிற்கு உதவியாக பழனிச்சாமி ஒரு சமையல் ஆர்டரை எடுத்துக் கொடுத்துள்ளார்.
கோபியை மரியாதை இல்லாமல் பேசிய பாக்கியா
குறித்த திருமண நிகழ்விற்கு கோபியும் ராதிகாவுடன் வந்துள்ளார். பழனிச்சாமி தனது நண்பர் வீட்டு திருமணம் என்பதால் அவரும் வந்துள்ளார்.
இதனால் கொந்தளித்த கோபி பழனிச்சாமியிடம் சென்று சண்டையிட்டுள்ளார். இதனைக் கேள்விபட்ட பாக்கியா கோபியை சரமாரியாக பேசியுள்ளார்.
எதற்காக பழனிச்சாமி சாரிடம் சண்டை போட்டிங்க... வெட்கமா இல்லையா... என்னை கேள்வி கேட்க நீங்க யாரு... மிஸ்டர் கோபிநாத் இனிமேல் என்னை கேள்வி கேட்கும் வேலையை வைச்சிக்காதீங்க என்று சரமாரியாக பொங்கி எழுந்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |