அமிர்தாவிடம் மாட்டிய ஈஸ்வரியின் பரிதாபநிலை! அம்பலமாகும் உண்மைமுகம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரியை தன் வழிக்கு கொண்டு வர அமிர்தா செய்த செயல் பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் பழகி வந்த கோபி அவரையே திருமணமும் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றார்.
கோபியின் இந்த செயலால் ரசிகர்கள் அவரைக் கடுமையாக திட்டித் தீர்த்து வருகின்றனர். தற்போது வீட்டில் சண்டைபோட்டுக் கொண்டு கோபியுடன் வசித்து வருகின்றார் இனியா.
சீரியலில் நடிகை சுசித்ரா பாக்கியா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில், இவருக்கே மக்களின் வரவேற்பு அதிகமாக கிடைத்துள்ளது.
I04FWT
புயலாக மாறிய பாக்கியா
கோபியிடம் கூறிய கடனை அடைப்பதற்கு பாக்கியா புயலாக மாறியதோடு, அடுத்தடுத்து ஆர்டரை பெற்று வருகின்றார். தற்போது ஆங்கிலம் கற்றுக்கொள்ள வகுப்பு ஒன்றிற்கும் சென்று வருகின்றார்.
ஆங்கிலம் தெரியாததால் தன்னை அசிங்கப்படுத்திய ராதிகாவை ஆங்கிலத்தில் பேசி வரவேற்று பயங்கர கெத்து காட்டினார்.
பாக்கியா வீட்டில் இல்லாததால் அமிர்தா ஈஸ்வரியை கவனித்துக் கொள்கின்றார். எப்பொழுதும் அமிர்தாவை திட்டித் தீர்த்த பாட்டி ஈஸ்வரியை எதிர்பாராத விதமாக தனது வழிக்கு கொண்டு வந்துள்ளார்.