குடிபோதையில் அலப்பறை செய்த கோபி.. கடுப்பில் கத்திய ராதிகா- விறுவிறுப்பான தருணங்கள்
குடிப்போதையில் வீட்டிற்குள் வந்த கோபி, ராதிகா பார்க்க அலப்பறை செய்து மாட்டியுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.
அந்த வகையில் பாக்கியலட்சுமியில் கணேஷ் பிரச்சனை பெரும் தலைவலியாக மாறியுள்ளது. கணேஷ் கடந்த எபிசோட்களில் பொலிஸ் அதிகாரியொருவரை அழைத்து கொண்டு பாக்கியாவின் வீட்டிற்கு வருகிறார்.
பொலிஸ் அதிகாரி வந்தவுடன் பாக்கியா அவர் கையால் காபி கொடுத்து வரவேற்கிறார். பின்னர் அமிர்தாவை அழைத்து கணேஷ் விடயம் குறித்து விசாரிக்கிறார்.
இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமிர்தா, எழில் பக்கம் சார்ந்துள்ளார்.
இதனை தொடர்ந்து பொலிஸ் அதிகாரிக்கு இப்போது தான் வீட்டில் என்ன நடக்கின்றது? என புரிந்துள்ளது. இதனால் கணேஷை கடுமையாக கண்டித்து விட்டு வெளியில் செல்கிறார்.
அலப்பறை செய்யும் கோபி
இந்த நிலையில் அதிகமான கடன் தொல்லையால் அலுவலகத்தை மூடி விடும் முடிவில் கோபி இருக்கிறார்.
இந்த விடயம் குறித்து அலுவலகத்தில் வேலைச் செய்யும் ஊழியர்களுக்கு அறிவித்து விட்டு ஊழியர்களின் சம்பள பணத்தை எப்படியாவது கொடுத்து விட வேண்டும் என யோசித்து கொண்டிருக்கிறார்.
இரவு வீட்டிற்கு வரும் கோபி மனசு சரியில்லாத காரணத்தால் குடித்து விட்டு வருகிறார். வந்தவர் சமையலறைக்கு சென்று அங்கு அலப்பறை செய்து கொண்டிருக்கிறார். இவரின் அலப்பறையை தாங்கிக் கொள்ள முடியாமல் ராதிகா, அறைக்குள் அழைத்து சென்று கடுமையாக கண்டிக்கிறார்.
“ஏன் இப்படி செய்றீங்க கோபி? ” என ராதிகா கேட்க அதற்கு கோபி மழுப்பலாக பதிலளிக்கிறார்.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கின்றது. பிள்ளைகள் பிரச்சினைக்கு மத்தியில் கோபியின் இந்த முடிவு வீட்டிலுள்ளவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |