Baakiyalakshmi: ராமமூர்த்தி இறந்து போயிட்டாரு.. சொன்னது பலிச்சிடுச்சு- சோகத்தில் குடும்பத்தினர்
பாக்கியலட்சுமி சீரியலில் ராமமூர்த்தி இறந்து போனதால் மொத்த குடும்பத்தினரும் துயரில் ஆழ்ந்துள்ளனர்.
பாக்கியலட்சுமி
பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில்களில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இன்று வரை விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருந்து வருகிறது. அதே சமயம் ஒவ்வொரு வாரமும் ஒரு பிரச்சனையை வைத்து ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியல் குறித்த எதிர்பார்ப்பை இயக்குனர் ஏற்படுத்தி வருகிறார்.
இவ்வளவு பிரச்சினைகளுக்கும் குடும்ப பெண்ணாக இருந்து பாக்கியா எப்படி தைரியமாக எதிர்கொள்கிறார் மற்றும் குடும்பத்திற்காக என்னென்ன விடயங்களை தியாகம் செய்கிறார் என்பதனை கருப்பொருளாக வைத்தே கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கிறது.
கதறும் குடும்பத்தினர்
இந்த நிலையில் ராமமூர்த்தி வீட்டிலுள்ள அனைவரிடமும் அன்பாக பேசி ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறார்.
அப்போது பாக்யாவை பார்த்து, “பாக்கியா நீ ரொம்பவும் நல்ல பொண்ணுமா. மத்தவங்களுக்காக ஓடி ஓடி உன் வாழ்க்கையை நீ வாழாமல் விட்டு விடாதே..” என்று சொல்லி விட்டு செல்கிறார்.
பிறகு ஈஸ்வரி வந்து எழுப்பி பார்க்க ராமமூர்த்தி எழும்பாமல் இருக்க மொத்த குடும்பத்தினரும் வந்து ராமமூர்த்தியை எழுப்பி பார்க்கின்றனர். வீட்டிலுள்ள அனைவரும் கத்தி அழுகிறார்கள்.
இப்படி இன்றைய தினம் வெளியான ப்ரோமோவில் “ராமமூர்த்தியின் இறுதி தருணங்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இனி பாக்கியலட்சுமி ராமமூர்த்தி இல்லை என ரசிகர்கள் கவலையாக இருக்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |