பாக்கியாவை பெண் பார்க்க வந்தாரா பழனிச்சாமி? கொதித்தெழுந்த கோபி
பாக்கியாவை பெண் பார்க்க தான் பழனிச்சாமி வந்தார் என நினைத்து கொண்டு கோபி கடுமையாக கத்தியுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோடை கடந்து ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டதால் இன்று வரை சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
அந்த வகையில், தற்போது கோபி - ராதிகா இருவருக்கும் குழந்தை பிறக்க போகிறது.
பாக்கியாவை விவாகரத்து செய்து விட்டு ராதிகாவை திருமணம் செய்து கொண்ட கோபி வாழ்க்கையில் ஒரு நிம்மதியே இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார்.
பெண் கேட்க வந்தாரா பழனிச்சாமி?
இந்த நிலையில், இனியாவின் பிறந்த நாளை முன்னிட்டு கோபி - ராதிகா மற்றும் பழனிச்சாமி குடும்பத்தினர் பாக்கியாவின் வீட்டிற்கு வந்துள்ளனர்.
அப்போது கோபியின் காது பட “ தட்டுடன் வந்திருந்தால் பாக்கியாவை பழனிச்சாமிற்கு பெண் கேட்டு சென்றிருக்கலாம்...” என பழனிச்சாமியின் உறவினர் ஒருவரும் அவருடைய அம்மாவும் பேசுகிறார்கள்.
இதை கேட்டு பாக்கியாவிடம் கோபி மிக கடுமையாக நடந்து கொள்கிறார்.
கோபம் பொறுக்காமல் பாக்கியா “ போதும்...” என கத்துகிறார். இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |