Neeya Naana: என்னை மாதிரி பெண்ணை ஏன் வேணாம்னு சொல்றீங்க... அரங்கத்தில் கண்கலங்கிய இளம்பெண்
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் குற்றம் சாட்டும் மணமகன் வீட்டார்... அதற்கு பதில் கொடுக்கும் இளம்பெண்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு குற்றம் சாட்டும் மணமகன் வீட்டார்... அதற்கு பதில் கொடுக்கும் இளம்பெண்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இன்றைய இளம்பெண்கள் அதிகமாக டிமெண்ட் வைப்பதாகவும், பெண் கிடைப்பதில்லை என்றும் மாப்பிள்ளை வீட்டினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் தற்போதைய இளம்பெண்கள் எந்த துறையினைச் சேர்ந்த மாப்பிள்ளையை அதிகமாக தெரிவு செய்கின்றனர் என்ற நிகழ்வையும் கோபிநாத் வைத்துள்ளார்.
இந்நிகழ்ச்சிக்கு வந்த ஏழை பெண் ஒருவர் தனக்கு இதுநாள் வரைக்கும் வந்த மாப்பிள்ளை அனைத்தும் 32 வயதிலிருந்து 34 வயதுள்ளவர்கள் தான் வருவதாக கண்கலங்கியுள்ளார். இதற்கு கோபிநாத் சரியான பதிலடியும் கொடுத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |