கோபியின் சூழ்ச்சிக்கு பாக்கியா கொடுத்த தரமான பதிலடி... தலைகுனிந்த சரியான தருணம்
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி பாக்கியாவிற்கு செய்த சூழ்ச்சிக்கு சரியான பதிலடி கிடைத்தள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னனியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று அவரை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து ஒரே வீட்டில் வசித்து வருகின்றார். இதில் ராதிகாவிற்கும் கோபியின் அம்மாவிற்கும் இடையே நடக்கும் சண்டை தற்போது ரசிகர்களிடையே சுவாரசியத்தை அதிகரித்து வருகின்றது.
இந்த சண்டை உச்சக்கட்டடை அடைந்து ஒரு கட்டத்தில் ராதிகா கோபியின் அம்மாவை மரியாதை இல்லாமல் பேசியுள்ளார். இந்நிலையில் குறித்த வீட்டை தன்வசப்படுத்த பாக்கியா ஒரு மாதத்தில் 20 லட்சம் சேர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
பாக்கியாவிற்கு உதவியாக பழனிச்சாமி ஒரு சமையல் ஆர்டரை எடுத்துக் கொடுத்துள்ளார். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு கோபி ராதிகாவுடன் வந்துள்ளார்.
பாக்கியாவிற்கு விரித்த சூழ்ச்சி
இந்த திருமண நிகழ்வில் பாக்கியாவை சிக்க வைக்க கோபி மலேசியா உணவுகளை சமைப்பதற்கு கோர்த்துவிட்ட நிலையில், பாக்கியா பழனிச்சாமி உதவியுடன் இரவு முழுவதும் முயற்சி செய்து ஒருவழியாக செய்து பழகியுள்ளார்.
திருமணத்தில் சாப்பாடு பரிமாறும் போது அட்டகாசமான எண்ட்ரி கொடுத்து மலேசியா உணவை பரிமாறி கோபியின் முகத்தில் கரியை பூசியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் பாக்கியாவை பாராட்டி பொன்னாடை போர்த்தவும் செய்ததை அவதானித்த பயங்கர கடுப்பில் மூழ்கியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |