காவல்நிலையம் செல்லும் நிலையில் பாக்கியா? கௌரவத்தை தட்டிப்பறித்த ராதிகா! சிக்கல் என்ன?
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா சமைக்க சென்ற இடத்தில் சிக்கலில் மாட்டிக்கொள்ள, இனியாவின் நிகழ்விற்கு ராதிகா செல்ல இருக்கின்றார்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னனியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று அவரை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து ஒரே வீட்டில் வசித்து வருகின்றார். இதில் ராதிகாவிற்கும் கோபியின் அம்மாவிற்கும் இடையே நடக்கும் சண்டையால் பாக்கியா விடாமுயற்சி செய்து வீட்டை தன்வசப்படுத்தியுள்ளார்.
இதனால் பயங்கர கோபத்தில் கோபி காணப்படுகின்றார். இனியா 12ம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து பள்ளியிலேயே முதலாம் மாணவியாக வந்துள்ளார்.
இதற்காக அவரை கௌரவப்படுத்துவதற்கு பள்ளிக்கு வரக் கோரியுள்ளனர். ஆனால் பாக்கியா சமைக்க சென்ற இடத்தில், பாயாசத்தை அடி பிடிக்க வைத்து சிக்கலில் சிக்கிக் கொள்கின்றார்.
இதனால் கோபப்பட்ட பெண் வீட்டினர் பாக்கியாவை பொலிசில் பிடித்துக் கொடுப்பதாக மிரட்டுகின்றனர். மற்றொரு புறம் இனியா மகிழ்ச்சியுடன் பள்ளியில் இருக்கும் நிலையில், அம்மா சீக்கிரம் வருவார் என்ற எதிர்பார்ப்புடனும் காணப்படுகின்றனர்.