கோபியின் திருமணத்தில் ஏற்பட்ட பூகம்பம்! விஸ்வரூபம் எடுத்த பாக்கியா: திருமணம் நடந்ததா?
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் திருமணத்தை நிறுத்த அவரது தந்தை வந்து சண்டையிடும் காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் கணவர் தொடர்பு வைத்துள்ளதாக எடுக்கப்பட்டுள்ளது.
பாக்கியாவிற்கு கோபி செய்யும் துரோகத்தால் ரசிகர்கள் அவரைத் திட்டித் தீர்த்து வரும் நிலையில், அனைவருக்கும் உண்மை தெரிந்து கோபி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
பாக்கியா தனி ஆளாக குடும்பத்தை சமாளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
கோபியின் திருமணத்தில் பாக்கியா
கணவர் கோபியிடம் போடப்பட்ட சவாலில் ஜெயிக்க, சமையல் போட்டியில் கலந்து கொண்ட பாக்கிய அதில் வெற்றிபெற்று முதன்முதலாக ஆர்டரையும் பெற்றுள்ளார்.
ஆனால் இது தனது கணவரின் திருமணத்திற்கான ஆர்டர் என்று தெரியாமல் பாக்கியாவும் வாங்கி சமைத்துக் கொண்டிருக்கின்றார்.
கோபி ராதிகா திருமணம் நடக்கும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு தற்போது புதிய ப்ரொமோ வெளியாகியுள்ளது. இதில் கோபியின் அப்பா வந்து சண்டையிடுகின்றார். அவரை பிடித்து தள்ளிய கோபி வெளிய போயா என்று கூறுகின்றார்.
இதில் கோபமடைந்த பாக்கிய பொங்கி எழுந்து கோபியிடம் கோபத்தை காட்டிவிட்டு பின்பு தனது மாமனாரை அழைத்து வந்து பேசுவதாக காட்டப்பட்டுள்ளது.