விந்துணுவின்மைக்கான பிரச்சினைகள் என்னென்ன? அறிகுறியும் தீர்வும்!
ஒரு ஆணின் விந்தணுக்களின் எண்ணிக்கை 15 மில்லியன்/ml அல்லது அதைவிட அதிகமாக இருக்கும். இந்த அளவை விட குறைவான விந்தணுக்கள் கொண்ட ஆண்கள் பிரச்சனையினால் பாதிக்கப்படுகின்றனர். விந்து வெளியேறும் போது தேவையான எண்ணிக்கையில் அது வெளியேறுவதில்லை.
ஆண்கள் அவர்களின் பார்ட்னர் கருத்தரிக்காத வரை இப்படி ஒரு பிரச்சனை அவர்களுக்கு உள்ளது என்பதை அறியமாட்டார்கள். ஆனால், சில அறிகுறிகள் ஹார்மோன் பிரச்சினைகள் அல்லது மரபணு பிரச்சினைகள் காரணமாக கூட ஏற்படலாம்.
விந்தணுவின்மை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் விறைப்புத்தன்மை பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடலாம். உடலுறவு கொள்ளும் போது தேவையான விறைப்புத்தன்மை பல ஆண்களுக்கு கிடைப்பதில்லை.
குறைந்த அளவான விறைப்புத்தன்மையும், நீங்கள் விந்தணுவின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள் என்பதைக் குறிக்கலாம். இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டால் மருத்துவ உதவியை நாட வேண்டும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குறைந்த செக்ஸ் இயக்கத்தை பெறுகிறார்கள்.
இது ஒரு உளவியல் காரணத்தால் ஏற்படுகிறது. இந்த பிரச்சனை உள்ள ஆண்கள் சுய மரியாதையை இழப்பதாக கருதுகிறார்கள். மேலும் அவர்களது பார்ட்னரை நோக்கி ஈர்க்கப்படுவது மிகவும் குறைவு என அவர்கள் எண்ணுகிறார்கள்.
இதனால் அவர்கள் அதிக சோர்வாகவும் மன அழுத்தமாகவும் உணரக்கூடும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்த அளவில் டெஸ்டோஸ்டிரோன் சுரக்கிறது. டெஸ்டோஸ்டீரான் அளவு குறைவாக இருப்பதால் முகம், மார்பு, இடுப்பு பகுதி மற்றும் மற்ற உடல் பகுதிகளில் முடியின் வளர்ச்சி குறைவாக இருக்கும்.
மேலும், சில காயங்கள் காரணமாகவும் முடி உதிர்தல் மற்றும் முடி வளர்ச்சியின்மையை பிரச்சனையை சந்திக்க நேரிடும். திடீரென ஏற்படும் வழுக்கை உங்கள் உடலில் பிரச்சினை உள்ளது என்பதை குறிக்கிறது.
இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களது விரைகளை சுற்றி வலி அல்லது வீக்கம் பிரச்சினையை அனுபவிக்கலாம். உங்கள் இடுப்புப் பகுதியில் ஏதேனும் வீக்கம் தென்பட்டால் நீங்கள் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசிக்கவும்.
சிலருக்கு பாலியல் உடலுறவுக்கு பிறகு வலி மற்றும் அதிகரித்த வீக்கம் இருப்பதாக கூறுகின்றனர்.
இது ஏதேனும் அடைப்பு காரணமாக ஏற்படலாம். எனவே உங்களது இடுப்புப் பகுதியில் ஏதேனும் வீக்கம் இருப்பதாக நீங்கள் அறிந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.