வனிதாவுடன் நெருக்கமாக அசீம்! வெளியான வைரல் புகைப்படம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளராக வந்த அசீம் தற்போது வனிதாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் அசீம்
சின்னத்திரை நடிகரான அசீம் தனது முதல் மனைவியுடன் விவாகரத்து பெற்ற நிலையில், இவருக்கு ஒரு மகனும் இருக்கின்றார். பகல் நிலவு சீரியலில் நடித்த நடிகையும், பிக்பாஸ் பிரபலமான நடிகை ஷிவானி மீது காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது.
இதனையெல்லாம் முறியடித்த அசீம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்தார். உள்ளே இருந்த ஒட்டுமொத்த போட்டியாளர்களின் வெறுப்பினை சம்பாதித்த அசீம் மக்களின் மனதில் நிலையான இடத்தினை பிடித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 10 வாரங்களுக்கு மேல் தொடர்ந்து நாமினேட் செய்யப்பட்ட அசீம், மக்களால் முதல் நபராக காப்பாற்றப்பட்டு, பல எதிர்ப்பினையும், கோபத்தினையும் கடந்த பிக்பாஸ் ஃபைனலில் நுழைந்தார்.
விக்ரமனை பெரும் எதரி்பார்ப்புகளுக்கிடையே தோற்கடித்த அசீமை பலரும் தவறான எடுத்துக்காட்டு என்று விமர்சித்தனர். ஆனால் இவற்றினை பொருட்படுத்தாமல் ரூபாய் 50 லட்சத்தை தட்டித் தூக்கினார்.
தற்போது சர்ச்சைக்கு பெயர் போன வனிதாவுடன் இணைந்து எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை தனது டுவிட்டரில் வெளியிட்ட வனிதா, " நாங்கள் யாருக்கும் உதாரணம் காட்ட இங்கு வரவில்லை.. விதிகளை உடைக்க வந்துள்ளோம் என கூறியுள்ளார்.