பிரம்மாண்டத்தின் உச்சம்: விண்வெளியில் படம் பிடிக்கப்பட்ட அயோத்தி ராமர் கோயில்
விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட அயோத்தி ராமர் கோயிலின் முதல் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அயோத்தி ராமர் கோயில்
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா இன்றைய தினம் நடந்து கொண்டிருக்கின்றது.
பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் “ராம் லல்லா சிலை” பிரான் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
இப்படியொரு நிலையில், இஸ்ரோவின் தேசிய தொலை உணர்வு மையம் (NRSC) விண்வெளியில் இருந்து உள்நாட்டு செயற்கை கோளை பயன்படுத்தி ராமர் கோயிலை படம் எடுத்துள்ளது.
என்.ஆர்.எஸ்.சி கூற்றுப்படி, இந்த கோயிலின் கட்டுமானமானது, கும்பாபிஷேக விழாவிற்கு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பு செயற்கை கோளால் படமாக்கப்பட்டுள்ளது.
செயற்கை கோல் புகைப்படத்தில் பார்க்கும் பொழுது புனரமைக்கப்பட்ட தஷ்ரத் மஹால் மற்றும் சரயு நதி ஆகியவை ராமர் கோயிலுக்கு அருகில் இருப்பதைக் காணலாம்.
இவ்வளவு பெரிய கோயிலா?
மேலும் புதுபிக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தையும் செயற்கைக் கோள் படத்தில் காணலாம். பாரம்பரிய நாகரா பாணியில் கோயில் வளாகம் கட்டப்பட்டுள்ளது.
அந்த வகையில், 380 அடி நீளம் (கிழக்கு-மேற்கு திசை), 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்டதாக வளாகம் இருக்கும்.
கோயிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் மற்றும் மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 நுழைவு வாயில்கள் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |