அட்சய திருதி அன்று இந்த தவறை மட்டும் செய்யாதீங்க! வீட்டில் வறுமை ஏற்படும் ஜாக்கிரதை
இந்து மதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது தான் அட்சய திருதியை... இந்த நாளில் நாம் செய்யும் சில தவறுகள் பொருளாதார சரிவை சந்திக்க நேரிடும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
அட்சய திருதியை
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் அது பலுகி பெருகும் என்பது ஐதீகம். 2023ம் ஆண்டு அட்சய திருதியை ஏப்ரல் 23ம் தேதி ஞாயிற்றுகிழமை வருகிறது.
ஏப்ரல் 22ம் தேதியே காலை 09.18 மணிவாக்கில் திதி தொடங்கிவிடும். மறுநாள் காலை 09.27 மணி வரை மட்டுமே அட்சய திருதியை திதி இருக்கும்.
அட்சய திருதியை அன்று செல்வத்தின் தெய்வமான மகாலக்ஷ்மியையும், மகா விஷ்ணுவையும் வணங்கினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
அட்சய திருதியை நாளில் செய்யக்கூடாதவை
மகாலட்சுமிக்கு துளசி இலைகளை சமர்ப்பிக்கக்கூடாது.
அடுத்தவர்களை அவமரியாதை செய்யுமாறு பேசக்கூடாது.
அட்சய திருதியையில் இறைச்சி, மது, பூண்டு, வெங்காயம் ஆகிய உணவுகளை உண்ண வேண்டாம். மீறினால் பண இழப்பு ஏற்படும்.
திருட்டு, சூதாட்டம், பொய் பேசுதல், மோசமாக நடந்து கொள்ளுதல் இவற்றினை செய்யக்கூடாது.
பூஜையறை, வீடு, லாக்கர், ஜன்னல், கதவுகள், ஈசானி மூலை இவற்றினை அழுக்கு இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
இந்த நாளில் யாருக்கும் கடன் கொடுக்கக்கூடாது. தங்கம் மட்டுமே வாங்க வேண்டும். வேறு பாத்திரங்கள், பிளாஸ்டிக் புதிய பொருட்கள் வாங்கினால் ராகுவால் பாதிப்பு ஏற்பட்டு வீட்டில் வறுமை ஏற்படும்.