ரோஸ் வாட்டரை இந்த பொருட்களோடு சேர்த்து பயன்படுத்தக் கூடாது? தெரிஞ்சுக்கோங்க
பெண்கள் பொதுவாக சருமத்திற்கு ரோஸ் வாட்டரை பயன்படுத்துகின்றனர். ரோஸ் வாட்டர் நமது உடலின் இயற்கையாக டோனராக பயன்படுத்தப்படுகின்றது.
இது ரோஜா இதழ்கழில் இருந்து செய்யப்படும் ஒரு திரவமாகும். நமது சருமத்தில் இருக்க கூடிய அழுக்குகள் மாசுக்கள் மற்றும் எண்ணெய் பிசுக்குகள் போன்றவற்றை அடியோடு இல்லாமல் பண்ணுகிறது.
இவ்வாறு பல நன்மைகளை தரக்கூடிய ரோஸ் வாட்டரை சில பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்த கூடாது. அதனால் எமது சருமத்தில் பல பிரச்சனைகளைஅகொண்டு வரும்.
அவ்வாறு பயன்படுத்தினால் எவ்வாறான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ரோஸ் வாட்டர்
1. ரோஸ் வாட்டரை நாம் பயன்படுத்துகின்ற அத்தியாவசிய எண்ணைகளோடு பயன்படுத்த கூடாது. அவ்வாறு பயன்படுத்தும் போது சருமத்தில் அலர்ஜி ஏற்படுத்தும். ஆஸ்துமா டெர்மாடிடிஸ் போன்ற நோய் இருப்பவர்களுக்கு பிரச்சனையாகிவிடும்.
2. விட்ச் ஹேசல் எனும் இயற்கை அஸ்ட்ரின்ஜன்டாக பயன்படத்தப்டுகின்றது. இதனை ரோஸ் வாட்டருடன் பயன்படுத்தினால் சருமத்தில் எரிச்சல் வறட்சி உண்டாகும்.
3. பேக்கிங் சோடாவில் இயற்கையாகவே ஆன்டிசெப்டிக் பண்பை கொண்டுள்ளது. இதனை ரோஸ் வாட்டருடன் கலந்து பயன்படுத்தினால் அது முகத்தில் முகப்பருவை ஏற்படுத்தும். இது மட்டுமல்லாமல் சருமத்தின் பீச் அளவை குறைக்கிறது. இதனால் சருமம் அதன் உணர்திரனை இழக்கும்.
4.எலுமிச்சை சாறில் வைட்டமின் சி உள்ளதால் இது முகப்பருவுக்கு எதிராக செய்ற்படுகிறது. ஆனால் இதை ரோஸ் வாட்டருடன் பயன்படுத்தினால் சருமத்தில் உள்ள பி எச்அளவை முற்றாக இல்லாமல் ஆக்கிவிடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |