கோடையில் தவறியும் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க!
தற்போது கோடை காலம் என்பதால் அதிகமான வெப்பத்தை உடல் தாங்கவேண்டி இருக்கிறது.
வெப்பத்தை தாங்க வேண்டிய சூழ்நிலையில் அதனை ஈடுசெய்ய உணவு விடயத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
சரி இனி கோடை காலத்தில் எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் எனப் பார்ப்போம்.

காரமான உணவுகள் - வெப்பமான சூழ்நிலையில் காரமான உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் இதிலுள்ள கேப்சைசின் என்ற சேர்மம் உடல்சூடு, அஜீரணம், நீரிழப்பு போன்ற பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும்.
கோப்பி - கோப்பி குடிப்பது உடலின் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்துவிடும்.
பழச்சாறு - பழச்சாறுகளை விட பழங்கள் மிகச் சிறந்த தேர்வாக இருக்கும்.
ஊறுகாய் - ஊறுகாய் நீரிழப்பை ஏற்படுத்தும். அதுமட்டுமில்லாமல் வெயில் காலத்தில் ஊறுகாயை சாப்பிடுவது அஜீரணத்தை உண்டாக்கும்.

பொரித்த உணவுகள் - வடை, சமோசா, பஜ்ஜி போன்ற உணவுகள் விரைவில் செரிமானம் ஆகாது. அதுமட்டுமில்லாமல் நீரிழப்புக்கும் வழிவகுக்கும்.
உப்பு உணவுகள் - அதிகப்படியான உப்பு, நீரிழப்புக்கு வழிவகுக்கும். அதுமட்டுமில்லாமல் மயக்கம், சோம்பல் போன்ற விளைவுகளையும் ஏற்படுத்தும்.