காலை எழுந்ததும் இந்த விடயங்களைப் பார்க்காதீங்க... பண பற்றாக்குறை ஏற்படுமாம்
காலையில் எழுந்தவுடன் பார்க்கக்கூடாத சில விடயங்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக நாம் புதிதாக தொடங்கும் நாளில் அனைத்து விடயங்களும் மிகவும் நன்றாக நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்திருக்கும்.
காலை எழுந்ததும் வீட்டில் உள்ள பெரியவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை சிறுவயதிலிருந்து கற்றுக் கொடுத்திருப்பார்கள்.
இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வாஸ்து படி, செய்யும் காரியங்கள் வாஸ்து தோஷத்தை ஏற்படாது மற்றும் நேர்மறை ஆற்றல் நிலைத்திருக்கும்.
வாஸ்து சாஸ்திரத்தில் காலை எழுந்தவுடன் சில பொருட்களை பார்ப்பது தடை செய்யப்பட்டுள்ளதுடன், இவற்றினை பார்ப்பது அசுபமாகவே கருதப்படுகின்றது.
நிதி இழப்பும் ஏற்பட அதிகமாக வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் காலை எழுந்ததும் என்னென்ன விடயங்களைப் பார்க்கக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.
காலை எழுந்ததும் எதை பார்க்கக்கூடாது?
வாஸ்து சாஸ்திரத்தில் காலை எழுந்தவுடன் உங்களது சொந்த நிழலையோ அல்லது வேறு ஒருவரின் நிழலையோ பார்ப்பது அசுபமாக கருதப்படுகிறது. மேலும் மன அழுத்தம் அதிகரிப்பதுடன், ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கின்றது.
காலை எழுந்ததும் அழுக்கு பாத்திரங்களை பார்க்கவே கூடாது. அவ்வாறு பார்த்தால் பண இழப்பு ஏற்படுவதுடன், வறுமையும் விட்டிற்கு வரும். ஆதலால் தூங்கும் முன்பு பாத்திரங்களை சுத்தம் செய்துவிட்டால், நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
காலை எழுந்ததும் ஓடாத கடிகாரத்தை பார்ப்பது அசுபமாக கருதப்படுகின்றது. மேலும் உங்களது வாழ்க்கையில் வெற்றி பெறுவதிலும் சிக்கல்கள் ஏற்படுகின்றது.
காலை எழுந்தவுடன் கண்ணாடி பார்க்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால் உடனே நிறுத்திக் கொள்ளவும். இவ்வாறு கண்ணாடி பார்ப்பதால், எதிர்மறை ஆற்றல் அதிகரிப்பதுடன், வாழ்க்கையில் மோசமான விளைவுகளை சந்திக்கவும் நேரிடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
