இரவில் அதிக நேரம் மொபைல் பார்ப்பவரா நீங்கள்? மூளை பாதிப்பு ஏற்படும் ஜாக்கிரதை
இரவு நேரத்தில் அதிகமாக மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கு மூளை பாதிப்பு ஏற்படும் என்பது தெரியவந்துள்ளது.
இரவில் அதிகமாக போன் பயன்படுத்துதல்
இன்று பெரும்பாலான நபர்களின் கைகளில் மொபைல் போன்கள் காணப்படுகின்றது. அதிலும் தனக்கு தேவையான விடயத்தினை அமர்ந்த இடத்தில் தெரிந்து கொள்வதும், பெற்றுக்கொள்வதும் சாதாரணமாகியுள்ளது.
பெரும்பாலான இளைஞர்கள் பலரும் இரவு நேரத்தில் தூக்கம் விழித்து மொபைல் போனை உபயோகப்படுத்தி வருகின்றனர். இதனை வழக்கமாக வைத்திருப்பவர்கள் ஆபத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.
இரவு முழுவதும் மொபைல் போனை பயன்படுத்திவிட்டு காலையில் அதிக நேரம் தூங்குவது உடல் சோர்வாக இருப்பதுடன், ஒரு கட்டத்தில் இது புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பாக இருக்கின்றது.
அடுத்தபடியாக இரவு நேரத்தில் மொபைல் போனை அதிகம் பயன்படுத்தினால் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறையுமாம்.
அதுமட்டுமில்லாமல் இரவு நேரத்தில் மொபைல் போனிலிருந்து வெளிப்படும் வெளிச்சமானது மூளையில் மெலடோனின் என்ற ஹார்மோனை சரியாக சுரக்காமல் தடைபடுத்துகின்றது. இதனால் மூளையில் பிரச்சினை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ஆகவே மொபைல் போனை சரியான நேரத்தில் பயன்படுத்திவிட்டு ஓய்வு எடுப்பது மிக மிக அவசியமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |