குழந்தைகளுக்கு இனிப்பு உணவினை அதிகமாக கொடுக்கிறீங்களா? அறிவாற்றல் பாதிக்கும் அபாயம்
குழந்தைகள் இனிப்பு அதிகமாக சாப்பிட்டால் என்னென்ன பிரச்சனையை நாம் சந்திக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் இனிப்பு சுவை என்றாலே பெரும்பாலான நபர்களுக்கு அலர்ஜியாக இருக்கின்றது. ஆம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நீரிழிவு நோயினால் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்கள் இனிப்பு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இனிப்பை கட்டுப்படுத்தவில்லையெனில் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகிவிடும்.
குழந்தைகளுக்கு இனிப்பு
குழந்தைகளுக்கு இனிப்பு அதிகமாக கொடுத்தால் வாழ்நாளில் பல நோய்களால் பாதிக்கப்படுவதாக அமெரிக்காவில் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இனிப்பு உணவுகளை உண்பதால் குழந்தைள் அதிக உடல் பருமனுடனும், ரத்த அழுத்தம் மற்றும் டைப் 2 நீரிழிவு நோயினாலும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகின்றது.
அமெரிக்காவில் குழந்தைகள் சராசரியாக நாள் ஒன்றிற்கு 17 தேக்கரண்டி சர்க்கரை எடுத்துக் கொள்வதாக கூறப்படுகின்றது. இவை உடம்பில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்குகின்றதாக உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும் சிறுமிகளுக்கு அதிகமாக இனிப்பு கொடுப்பதால் வளர்சிதை மாற்றம் பாதிப்பதுடன், முன்கூட்டியே பருவமாற்றம் அடையும் நிலை ஏற்படுகின்றதாம்.
அதிக சர்க்கரை உட்கொள்ளும் போது கல்லீரல் செயல்பாடு கடுமையாக பாதிக்கப்படுவதுடன், மூளையின் செயல்பாடும் பாதிப்பதுடன், அறிவாற்றல் வளர்ச்சி குறைவதையும் ஆய்வில் உறுதி செய்துள்ளனர்.
நாம் இனிப்பு என்றால் வெறும் சீனி மற்றும் சர்க்கரை என்று நினைத்துக் கொள்கின்றோம். ஆனால் பதப்படுத்தப்பட்ட தானியங்கள் முதல் பழச்சாறுகள் வரை உணவுகளில் சர்க்கரை அதிகமாக காணப்படுகின்றது.
எனவே, இந்த வகையான உணவுகளை குறைத்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும் என உலகளாவிய ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
