மறந்தும் கூட இரவில் சாப்பிடக்கூடாத காய்கறிகள் எவை தெரியுமா?
இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாத காய்கறிகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஆரோக்கியத்தை அள்ளித்தரும் உணவுகளில் ஒன்று தான் காய்கறிகள். உடம்பை ஆரோக்கியமாகவும், நோய்கள் வராமலும் தடுக்கின்றது.
ஆனால் இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாத காய்கறிகளும் உள்ளது. இவை ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்குமாம்.
இரவில் சாப்பிடக்கூடாத காய்கறிகள்
இரவில் நிம்மதியாக தூங்க வேண்டும் என்றால் பூண்டு சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில் இவை வயிற்றில், வாயு, வீக்கம் போன்ற பிரச்சினையை ஏற்படுத்தும்.
ப்ரோக்கோலியில் இருக்கும் ட்ரிப்டோபான் என்ற பண்பு தூக்கத்தை கெடுக்கும். மேலும் இதில் ஏராளமான நார்ச்சத்துக்கள் உள்ளதால், இரவு சாப்பிட்டால் ஜீரணமாவது கடினமாக இருக்கும்.
வெங்காயத்தை இரவில் அதிகமாக எடுத்துக்கொண்டால் வயிறு உப்புசம் ஏற்பட்டு தூக்கத்தில் பிரச்சினை வராமல் தடுக்கின்றது.
இரவு நேரத்தில் தக்காளி சாப்பிட்டால், வயிறு தொடர்பான பிரச்சனைகள் உண்டாவதுடன், இதிலிருக்கும் அமில பண்புகள் மூளையின் செயல்பாட்டை அதிகரித்து தூங்குவதில் சிரமத்தை ஏற்படுத்துகின்றது.
கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து இருப்பதால் இரவில் இதனை எடுத்துக்கொண்டால் வீக்கம் மற்றும் வாயு பிரச்சனையை ஏற்படுத்தும்.
Ethirneechal: வீட்டிற்கு வந்த கடன்காரர்கள்! தோற்றுப்போன நந்தினி மீள்வது எப்படி? கெத்து காட்டும் குணசேகரன்
ஊட்டச்சத்து அதிகம் கொண்ட பச்சை பட்டாணியை இரவில் சாப்பிட்டால் வாயு மற்றும் வயிறு வீக்கம் ஏற்படுகின்றது. இது செரிமான அமைப்பில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |